64 கோடி ரூபாய் போஃபர்ஸ் வழக்கின் முக்கிய தகவல்களை வழங்க கோரி அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போஃபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ஆயிரத்து 437 கோடி ரூபாய் செலவில் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக போஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை பெற மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இதுவரை எந்த தகவலும கிடைக்கப்பெறாததால், போஃபர்ஸ் லஞ்ச ஊழல் குறித்த முக்கியமான விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்த தனியார் புலனாய்வு நிறுவனத்திடம் இருந்து தகவல்களை பெற்று தர வேண்டும் என அமெரிக்காவிற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.