இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு குறையாமல் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மணாலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனினும் கடும் பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.