திருச்சி அருகே பொன்னர்-சங்கர் மாசி பெருந்திருவிழாவில் பொன்னர் அம்பு போடும் வேடபரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர் மன்னர்களின் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி, அணியாப்பூர் குதிரைக் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அப்போது, சாம்புகன் முரசு கொட்டிக் கொண்டே முன்னே செல்ல, குதிரை வாகனத்தில் பொன்னரையும், யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனையும் பின்னால் கொண்டு வந்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.