கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நடைபெற்றது. இதில் கடவுள் போல வேடமணிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்வுக்காக தயார் செய்யப்பட்ட மொச்சைப் பயிர்களை பக்தர்களை நோக்கி வீசும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த மொசைப் பயிர்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் இருப்பதால், அதனை வாங்க பக்தர்கள் போட்டி போட்டனர்.