இந்திய பொருட்கள் மீது பரஸ்பர வரி விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதால், ஐபோன், டேப்லெட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அமளிக்கிடையே கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என கூறியிருந்தார்.
அதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், ஐபோன், டேப்லெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.