முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஊழியர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற புதிய வருகைப் பதிவேடு முறையை செயல்படுத்துகிறது.
கொரோனா தொற்றுக்கு பிறகு கணிசமாகக் குறைந்த அலுவலக வருகைப் பதிவை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துறைத் தலைவர்கள் தங்கள் குழுக்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்.