திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர், பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர் மன்னர்களின் மாசி பெருந்திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி, அணியாப்பூர் குதிரைக் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.