அர்ஜென்டினாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினாவின் பஹியா பிளான்கா நகரில் தொடர் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.