ஜம்மு-காஷ்மீரின் டோடா நகரில் பனிக்கட்டிகளை ஒருவருக்கொருவர் வீசி சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் கடந்தும் டோடா நகரில் பனிப்பொழிவு குறையாமல் உள்ளது. இதனால் அங்குள்ள மலைகள் அடர்ந்த பனியால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கின்றன.
முழங்கால் மறையும் அளவிற்கு அங்கு பனி படர்ந்துள்ள நிலையில், கடும் பனியையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றனர்.