சீனாவில் புதிய மின்சார காரை TOYOTA நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனத்திற்கு BZ-3X என்று பெயர் சூட்டியுள்ள TOYOTA நிறுவனம், இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபாய்க்கு இந்த காரை களமிறக்கியுள்ளது.
இந்த மின்சார காருக்கு சீன வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு அளித்துள்ள நிலையில், வெளியான ஒரு மணி நேரத்திலேயே 10 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இந்த வாகனம் அசத்தியுள்ளது.
இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருவது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.