மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என ஒரு மாதத்திற்குள் தெரிவிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா – மகாராஷ்டிரா இடையிலான மொழிப்போர் பிரச்னை தொடர்பாக ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேட்டியளித்த கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பந்த் நடத்த உள்ளதாக கூறினார்.
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்றால், கர்நாடகாவில் தமிழ் படங்களை திரையிட விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் மும்மொழி கொள்கைக்கு எதிராக தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கு கண்டனம் எனவும் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.