பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை கட்டடத்தின் ஒரு பகுதி நள்ளிரவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், கட்டட இடிபாடுகளில் 5க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்ட நிலையில், ஒரு தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.