கும்பகோணம் ரயில் நிலையத்தை சீரமைப்பதற்கு ரயில்வேத்துறை 98 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஜெயந்தி, 2028-ல் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக திருவிழாவிற்காக ரயில் நிலையத்தை சீரமைப்பதற்கு ரயில்வேத்துறை 98 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.