எக்ஸ் நிறுவனம் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது என்றும், ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதில் ஒரு பெரிய குழு அல்லது ஒரு நாட்டிற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றும், சைபர் தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
எக்ஸ் தளம் நேற்று பிற்பகல் 3.30 முதல் 3.45 வரை எக்ஸ் தளம் சிக்கல்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.