பீகாரில் பிரம்மாண்ட சீதை கோயில் கட்டப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதியளித்தார்.
மேலும் கோயில் திறப்பு விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பீகாரில் ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் வகையில், சீதை கோயிலுக்கு ராஷ்டிர ஜனதா தள கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக நித்யானந்த் ராய்
குற்றம் சாட்டினார்.