பொள்ளாச்சி அருகே குட்கா பொருள் கடத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆனைமலை போலீசார், கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு நபர் வாகனத்தில் இருந்து தப்பியோடினார். இதனால் சந்தேகம் அடைந்து வாகனத்தை சோதனை செய்ததில், ஆயிரத்து 287 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் முகமது சபிலை போலீசார் கைது செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.