திரைப்பட இசையமைப்பாளராக வருவதற்கு இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்தான் காரணம் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான ஹினாவின் புதிய ஆடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டு புதிய ஆடைகளை அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் செம மாஸாக வந்துள்ளதாக தெரிவித்தார்.
இளையராஜாவின் சிம்பொனிக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.வி.பிரகாஷ், திரைப்பட இசையமைப்பாளராக வருவதற்கு இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும்தான் காரணம் என கூறினார்.