ராமநாதபுரத்தில் தாய் இறந்த நிலையிலும், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி, தந்தையை கட்டிப்பிடித்து கதறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகேசன்-அமுதா தம்பதியின் மகளான பிரியதர்ஷினி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரியதர்ஷினியின் தாய் அமுதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை திடீரென உயிரிழந்தார்.
தனது தாய் உயிரிழந்த நிலையிலும், வேறு வழியின்றி பனிரெண்டாம் வகுப்பு கணித தேர்வை எழுத மாணவி சென்றார். பின்னர், தேர்வு முடித்து வந்த மாணவி, தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.