தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகார் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் 30ஆம் தேதிக்குள் யோசனைகளை தெரிவிக்குமாறு நாடு முழவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.