அமெரிக்காவின் மதுபானங்களுக்கு 150 சதவீதமும் விவசாய பொருட்களுக்கு 100 சதவீதமும் இந்தியா வரி விதிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
ஏற்கெனவே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரியை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா எந்தளவுக்கு வரி விதிக்கிறதோ, அந்த அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் எனவும், பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.
இந்தத் தருணத்தில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் குற்றம் சாட்டியுள்ளார்.