நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தவனத்தில் வாழும் கைம்பெண்கள் வண்ண பொடிகளை தூவி ஹோலி கொண்டாடினர். கைம்பெண்கள் ஹோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.