தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது வெற்று அறிவிப்புகளால் சாமானிய மக்களை நம்பவைத்து, மீண்டும் மீண்டும் ஏமாற்றக்கூடிய அறிக்கையாக உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வேறு எந்தவித திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.