கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திமுக அரசு முழுமையாக புறக்கணித்துள்ளது என தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் கானல் நீராகிப் போய்விட்டது என தெரிவித்துள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம், தமிழக அரசின் பட்ஜெட், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான பட்ஜெட் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனவும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.