தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மார்ச் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த மாயவன் தமிழ் ஜனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
சரண் விடுப்பு ஆணை அடுத்த ஆண்டு நிறைவேற்றுவதாக கூறுவது போகாத ஊருக்கு வழி வகுக்கும் என்றும், நிதி பற்றாக்குறை என்று சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.