பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர், பக்தர்களை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கியர்களின் புத்தாண்டான ஹோலா மொஹாலா 3 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி ஏராளமான பக்தர்கள் பொற்கோயிலில் கூடியிருந்தனர். அப்போது இரும்பு கம்பியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பக்தர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், சக பக்தர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஹரியானாவைச் சேர்ந்த சுல்பான் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொற்கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.