இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் 17 வயது ரஷ்ய வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளார்.
அமெரிக்காவின் கலொபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவாவும் பலப்பரீட்டை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஆண்ட்ரீவா வெற்றி பெற்றார்.