டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மதுபானம் வாங்குவதற்காக வந்த நபர் ஒருவரிடம் கூடுதலாக ரூபாய் வசூலித்துள்ளார். இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய அவரிடம், சுரேஷ் காட்டமாகப் பேசியுள்ளார்.
பின்னர் காணொளி எடுக்கப்படுவதைக் கவனித்து, கூடுதலாகப் பெற்ற காசை திருப்பி அளித்து விட்டார். டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தற்போதும் நிறுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.