அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் டெல்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
இந்தியா வருகை தந்துள்ள துளசி கப்பார்ட் அஜித் தோவலை சந்தித்து, பயங்கரவாதம் மற்றும் வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், இருநாட்டு உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.