விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக புதுமணத் தம்பதி கையொப்பமிட்டனர்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகத் தமிழக பாஜக சார்பில், “சமக்கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களிடம் பாஜகவினர் விளக்கி கையெழுத்து பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகச் சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ராமர் – திவ்யா, திருமணம் முடிந்த கையோடு, பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் பிரதாப் முன்னிலையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டனர்.