தஞ்சாவூர் அருகே நச்சுப்புகை வெளியேற்றும் தார் பிளாண்ட் அமைக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் தார் பிளாண்ட் அமைக்க பணிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பிளாண்ட் அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் நலம் பாதிக்கப்படும் எனக் கூறி மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பிளாண்ட் அமைக்க அனுமதிக்கக் கூடாது எனக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.