சுனிதா வில்லியம்ஸின் உடல் நலன் மற்றும் மன நலன் சிறப்பாக இருந்ததால், கமாண்டராக இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை சிறப்பாக வழிநடத்தியுள்ளதாக முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சுனிதா வில்லியம்ஸ் சென்ற கலன் பழுதானதால் வேறு கலனை உடனே அனுப்ப இயலவில்லை என தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் இதைவிட அதிக நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளதாகவும், விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவர் என்ற பெருமையும் சுனிதா வில்லியம்ஸுக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.
பூமி திரும்பும் வரை சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் செயல்பட்டதாகவும், உடல், மன நலன் சிறப்பாக இருந்ததால் சிறந்த கமாண்டராக வழிநடத்த முடிந்தது என்றும் கூறினார்.
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் செயல்படத் தொடங்கும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.