மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்ஸி செயலிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆட்டோ மூலம் கிடைக்க பெறும் வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருவதாக கூறும் ஓட்டுநர்கள், ஆன்லைன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்கத்தில் இணையாத ஆட்டோக்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.