உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாகப் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் வடக்கு ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்து வெளியிடப்பட்ட இந்த சர்வேயில், பின்லாந்து தொடர்ந்து 8ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
2012ஆம் ஆண்டு 11ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 24வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 118ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.