ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் விமான டாக்ஸிகளை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
குண்டூரைச் சேர்ந்த சாவா அபிராம் என்ற அந்த இளைஞர் அமெரிக்காவில் ரோபாட்டிக்ஸ் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நாட்டிற்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நாடு திரும்பிய அவர், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் விமான டாக்சிகளை இயக்குவது பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
அதனடிப்படையில் ஒரு விமானி மற்றும் இருவர் பயணிக்கும் விமான டாக்ஸியை அவர் வடிவமைத்தார். அதற்கு V2 எனப் பெயரிடப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றியடைந்த நிலையில், 3 பேர் பயணிக்கும் வகையில் விமான டாக்ஸியை அவர் வடிவமைத்து வருகிறார்.