நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுஜா நகரில் உள்ள நெடுஞ்சாலை வழியாக எரிபொருள் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றுள்ளது. அப்போது எரிபொருள் கசிந்து லாரி வெடித்துச் சிதறி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.