மதுரை பறக்கும் பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த 6 பேர் மதுரை தத்தனேரி பகுதியில் வாடகைக்கு கார் எடுத்து அழகர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவர்கள், மீண்டும் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை – நத்தம் இடையிலான பறக்கும் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த செங்கல் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், விபத்தில் ஓட்டுநர் மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயங்களுடன் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதியழகனின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.