நாகை புத்தூர் ரவுண்டானா பகுதியில் 5 நாட்களாக நெல் மூட்டைகளுடன் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகையில் சம்பா அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில், நாகையிலிருந்து வடசென்னை பகுதிக்கு ரயில் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
புத்தூர் ரவுண்டானா பகுதியில் நெல் மூட்டைகளுடன் 5 நாட்களாக 75-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அபாயம் உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பாக அரவைக்கு அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.