ஓசூர் அருகே நிலத்தகராறில் இளைஞரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தேவராஜ் இடையே நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேவராஜ், மனோஜ்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.