லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்கியுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஹீத்ரு விமான நிலையத்தில் விமானச் சேவை முழு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.