உத்தரப் பிரதேசத்தில் கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொடூரமாகக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரட் மாவட்டம் பிரம்மபுரியைச் சேர்ந்த சவுரப் ராஜ்புத், தனது மனைவி முஸ்கான் ரஸ்தோகியின் திருமணம் தாண்டிய உறவு குறித்துத் தட்டிக்கேட்டதால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கணவரை கொன்ற 11 நாட்களுக்கு பின் முஸ்கான் ஆண் நண்பருடன் சேர்ந்து மணாலி பகுதியில் ஹோலி கொண்டாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.