கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள தண்ணீர் பழங்களை மக்கள் அதிகளவில் எடுத்து கொள்கின்றனர்.
ஒரு கிலோ தர்பூசணி 15 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அதனை ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.