ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இரவு 10.10 மற்றும் 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கும், இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கத்தில் இருந்து கடற்கரைக்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.