கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீனபரணி தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லைப் பகுதியான கொல்லங்கோடு பகுதியில் புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கலை நிகழ்ச்சிகளுடன் மேள தாளங்கள் முழங்கத் தாய் கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் ஊர்வலம், திருவிழா நடைபெறும் கோயில் வந்தடைந்தது. பின்னர், மதுரை ஆதினம் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 29ஆம் தேதி காவடி ஊர்வலமும், ஏப்ரல் 1ஆம் தேதி பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.