கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கொலை செய்த வழக்கில் கைதான லாரி ஓட்டுநர்கள் தப்பியோட முயன்றபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கருமத்தம் பட்டியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். இந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த லாரி ஓட்டுநர்கள் இருவர், விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியுள்ளனர்.
இதைத் தட்டிக்கேட்ட காளிமுத்துவை 2 லாரி ஓட்டுநர்களும் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை லாரி ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதனிடையே லாரி ஓட்டுநர்கள் காவலர்களிடம் இருந்து தப்ப முயன்று கீழே விழுந்த நிலையில், இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.