அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
புளோரிடா, நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை காரணமாகக் காட்டுத்தீ ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வட கரோலினாலும் காட்டுத்தீ வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர். மேலும், பெரும்பாலான மக்களுக்குப் புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.