நீலகிரியில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்தைக் கைவிடக் கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
2013ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாயிரம் மெகாவாட் மின் திட்டமான, சில்ஹல்லா மின் திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தால், உதகையில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.