சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.
திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு, கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்.
அப்போது அங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழங்காலப் பொருட்களைக் கண்டு வியந்த அவர், தமிழ் தான் நம் உயிர்மூச்சு என்று கூறினார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனக்கூறிய நடிகர் வடிவேலு, அதே நேரத்தில் மற்ற மொழிகளை விமர்சித்துப் பேச தனக்கு விருப்பமில்லை என்று பேட்டியளித்தார்.