வாணியம்பாடியில் நீதிமன்ற மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 120 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்கட்டடத்தின் மேற்கூரை சேதம் அடைந்திருந்த நிலையில் சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக நீதிமன்ற அமர்வு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் கட்டட பணிகளை தொடங்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக பார் அசோசியேஷன் தலைவர் தேவகுமார் தெரிவித்துள்ளார்.