ஜப்பான் நாட்டு விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா சர்வதேச விண்வெளி மையத்தில் பேஸ் பால் விளையாடும் காணொளி காட்சிகள் வைரலாகி வருகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய நிலையில், விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடோ, ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் பேஸ் பால் விளையாடினார். இதுதொடர்பான வீடியோவை எலன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.