தென் கொரியாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
அந்நாட்டின் உய்சோங்கி மலைப்பகுதியில் தீப்பற்றியது. இதையடுத்து அருகில் வசித்த 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்தனர்.